001c.jpg

DSC_0461_c.jpg

DSC_0553.jpg

ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் காயத்ரி

ஓம் மகாசக்த்யை ச தீப்பாஞ்ஜாய வித்மஹே
     சக்தி ஸ்வரூபிண்ய தீமஹி
     தன்னோ பெரியநாச்சி ப்ரசோதயாத்!

           காயத்ரியை தினம் 108 முறை ஜெபிக்கவும்

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் துதி

சொற்பொருளும் உடலுயிருஞ் சுடரொளியும்
      விரைமலரும் சுவையும் பாலும்
நிற்குநிறை யெனக் கலந்து நிகரில்
      வீரிய பெருமாள் நிமலன் தன்னோ(டு)
அற்புதமாம் ஆடல்பல புரிந்தருளித்
      திருச்சி நகர் தென்னூர் மேவும்
பொற்றாமரைக் குளம் வாழ்
      பெரியநாச்சித் தாள் பணிந்து
                                     சிறக்க வாழ்வோம்
சீராரும் வணிகர்குலம் சிறக்க வரும்
      தெள்ளமுதே! தேவே இந்தப்
பாருலகம் போற்றுகின்ற பார்வதியே
அடியேங்கள் பாவந்தீர்த்தாளும் பார்வதியே
      பூரணியே! நாயகனாம் பொற்புடை
வீரிய பெருமாள் புகழுந்தேவி
      பேராரும் எமதன்னை
      பெரியநாச்சி தாயே! நின் மலர்த்தாள்
      போற்றி! போற்றி!!
     

ஓம் ஹரி கோவிந்தா!

தண்ணீரில் விளக்கெரிந்த தன்மையை தரணியோர்கள்
உண்மையா யெண்ணி நாளும் உன்திரு வடியைப் போற்றி
தன்மைசேர் தனயனுக்கு தாழ்விலா ஆயுள் தந்து
பெண்மணி வாழுந் தென்னூர் பெண்ணாச்சியே காத்தாள்வாயே.

மஞ்சு சூழ் தென்னூர் தன்னில் மாபெரும் கோவில் வாழும்
கொஞ்சிய முப்பத்து மூன்று குலதெய்வம் கும்பிட்டேத்தும்
அஞ்சு கோத்திரத் தாருக்கும் அன்புள அடியாருக்கும்
நெஞ்சினில் நினைத்த தெல்லாம் நிமிஷத்தில் தருகுவாயே 
                                                       தோத்திரப் பாமாலை - பாடல் : 13 & 6

ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் துதி

வானமும் புவிகள் ஏழும் நான்மறை துதிக்கவேதான்
தானவன் அருளினாலே தணலில் பள்ளிகொண்டாய்
தேன்மொழி பெரிய நாச்சி உன் சீர்பாதம் உறுதியாக யாம்
உன்னை அடைந்தோம் அம்மா எங்களை ஆதரித்தருள் தாயே!

நமது குல தெய்வமான ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் மற்றும் ஸ்ரீ் வீரிய பெருமாள், ஸ்ரீ் வீரப்ப சாமி , இதர பரிவார தெய்வங்களின் அருள் பெற்று நலமுடன் வாழ வணங்கி வழி படுவோம்

இக்கோவில் வாணிய செட்டியார் சமுகத்தினரின் 5 கோத்திர குடிமக்களுக்கு சொந்தமானது.

  1. பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம்
  2. தென்னவராயன் மகரிஷி கோத்திரம்
  3. பயிராலழக மகரிஷி கோத்திரம்
  4. பாக்குடையான் மகரிஷி கோத்திரம்
  5. மாத்துடையான் மகரிஷி கோத்திரம
பூஜைகள்

காலை 7 மணி
மதியம் 12 மணி
மாலை 7 மணி
கோவில் திறப்பு நேரம்
காலை 06.30 - மதியம் 12.15 வரை
மாலை 05.30 - இரவு 08.30 வரை

உத்திர நட்சத்திர பூஜை

10-05-14 - சித் 27 - சனி
06-06-14 - வை 23 - வெள்ளி
04-07-14 - ஆனி 20 - வெள்ளி (ஜனனம்)
31-07-14 - ஆடி 15 - வியாழன்
27-08-14 - ஆவணி 11 - புதன்
23-09-14 - புரட் 7 - செவ்
21-10-14 - ஐப் 4 - செவ்
17-11-14 - கார் 1 - திங்கள்
14-12-14 - கார் 28 - ஞாயிறு
11-01-15 - மார் 27 - ஞாயிறு
07-02-15 - தை 24 - சனி
06-03-15 - மாசி 22 - வெள்ளி
03-04-15 - பங் 20 - வெள்ளி

வருட பூஜைகள்

ஆடி 18 - 03-08-14 ஆடி 18 பூஜை (மதியம்)
மாசி 5 - 17-02-14 மஹா சிவராத்திரி (இரவு)

ஆனி உத்திரம் - 04-07-14
       பெரியநாச்சி ஜனன நட்சத்திரம்
ஆனி 26 - 10-07-14 - கும்பாபிஷேக நட்சத்திரம் (கேட்டை)
புரட் 5 - 21-09-14 நாகர் பூஜை(ஆயில்யம்)