001c.jpg

DSC_0461_c.jpg

DSC_0553.jpg

திருத்தலம்

கோவில்

நமது  கோவிலில் உள்ள தெய்வங்களை அவை வீற்றிருக்கும் இடம் வகையில் பட்டியலிடப் பட்டுள்ளது. படையல்/நைவேத்யம் செய்யப் படும் 33 தெய்வங்களை # குறியிட்டுள்ளோம்.


 

ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன் கோவில் தெய்வங்கள்
எண் பெயர் விவரம்
மூலக் கருவரை சந்நிதி
1 ஸ்ரீ் விநாயகர் மூலக் கடவுள்
2 ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன்
ஸ்ரீ வீரிய பெருமாள்
குல தெய்வம்
ஸ்ரீ் பெரியநாச்சயின் கணவர்
3 ராஜா விசுவப்ப நாயக்கர்(பதுவு)
- கருவரையின் உள்ளே
ஸ்ரீ பெரிய நாச்சியின் தகப்பன் ஸ்தானம்
4 மந்திரி அரிய நாத முதலியார்(பதுவு)
- கருவரையின் உள்ளே
ராஜாவுடனிருந்து கட்டளைகளை செய்பவர்
5 ஸ்ரீ வீரப்ப சுவாமி - ஆதிக்கம் ஸ்ரீ பெரிய நாச்சி அம்மனின் முன்னோடும் பிள்ளை - பெருமாள் மலை பிச்சாயின் கணவர் - சிதையின் போது பெருமாள் மலையிலிருந்து வந்தவர்
6, 7 தனி நபர் (2) ஆண் விக்ரகம் பெயர் தெரியவில்லை
8, 9, 10 பதுவு (3) - கிழக்கே 2 + மேற்கே 1 (அண்ணாவி, கழுகடையான், ???)
11, 12, 13 தம்பதி(3 ஜோடி) பெயர் தெரியவில்லை???
14 ஸ்ரீ் மாசி பெரியண்ணா (தடம் காண்பிப்பவர்) ஓமாந்தூர்/கொல்லிமலை
15 அக்னி பீடம் ஸ்ரீ் பெரியநாச்சயின் பலிபீடம்
(இத்துடன் மூலக் கருவரை சந்நிதி பகுதி முடிவடைகிறது)
 
ஸ்ரீ பெரியக் காண்டி அம்மன் (வீரப்பூர் வகையரா) & பரிவார தெய்வங்கள்
உள்ள வடமேற்கு சந்நிதி **
ஆதியில் இந்த இடம் ஸ்ரீ பெரியக் காண்டி அம்மனின் மந்தையாக இருந்ததால்,
நமது கோவிலில் தினசரி 3 வேளை, நைவேத்யம் படைத்து பூஜை செய்து வருகிறோம்
16 ஸ்ரீ் விநாயகர் மூலக் கடவுள்
17 ஸ்ரீ பெரியக் காண்டி அம்மன் வீரப்பூர் ஸ்ரீ பெரியக் காண்டி அம்மன்
18 ஸ்ரீ் சப்த கன்னிமார் 7 எண்ணிக்கை ஸ்ரீ் ப்ராம்பி, ஸ்ரீ் மாஹேஸ்வரி, ஸ்ரீ் கௌமாரி, ஸ்ரீ் வைஷ்ணவி,
ஸ்ரீ் வாராஹி, ஸ்ரீ் இந்த்ராணி, ஸ்ரீ் சாமுண்டி
19 ஸ்ரீ் நல்ல தங்காள் ...
20, 21 ஸ்ரீ பொன்னர் - சங்கர்(2 சிலை) ...
22, 23 ஸ்ரீ் அத்த புள்ள அத்தான்(மாயம் பெருமாள்) பதுவு
ஈஸ்வரன் பெயர்(????)பதுவு
...
24 ஸ்ரீ் லாடமுனி சன்னாசி ...
25 ஸ்ரீ் மந்திர மகாமுனி ...
26 ஸ்ரீ் கெஜலஷ்மி சந்நிதி வாயில் மேல்
(இத்துடன் ஸ்ரீ் பெரியக் காண்டி அம்மனின் சந்நிதி பகுதி முடிவடைகிறது)
 
27 ஸ்ரீ வீரமலையான்டி (ஸ்ரீ் பெரியக் காண்டி அம்மனின் முன்னோடும் பிள்ளை)
28 ஸ்ரீ மழுங்கு ராவுத்தர்
(இஸ்லாமிய மதத்தவர்)
பிறவி அங்கஹீனம் உடையவர்(கை)
பெரிய நாச்சி வந்த போது உதவியவர்(வேறு சில கதைகளும் உள்ளது -
1. வீரப்ப சுவாமியின் நண்பர் - புலி வேட்டையில் கை இழந்தவர்
2. பெரிய நாச்சியின் விளக்கில் சுருட்டு பற்ற வைத்ததால் கை போனது
29 பலி பீடம் ஸ்ரீ் பெரியக் காண்டி அம்மன்
30 ஸ்ரீ நம்பியப்ப சுவாமி மத்தியஸ்தர் - அன்பில் ஸ்ரீ் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில்
- ஸ்ரீ் பெரிய நாச்சிக்கும் ஸ்ரீ் பெரியக் காண்டிக்கும் மத்துசம் செய்பவர்
31 ஸ்ரீ மலையாள முத்தையன் மந்திர, மாந்திரீகங்களுக்காக
32 ஸ்ரீ் மதுரை வீரன் ...
33 ஸ்ரீ சாம்ப மூர்த்தி அரிஜன் இனத்தவர் - பறையடித்து தகவல் தெரிவிப்பவர்
  ஸ்ரீ பனையடி கருப்பு - படையல் இல்லை
பெரும் பூஜையன்று மாமிசம் படைக்க படுகிறது
ஆதியிலிருந்து உள்ளது - பெரிய நாச்சி வருவதற்கு முன்னால்
ஸ்ரீ் மதுரை வீரன், ஸ்ரீ மலையாள முத்தையன் உணவருந்தும் இடம்


** - நமது ஸ்ரீ் பெரிய நாச்சி அம்மன் - ஸ்ரீ பெரியக் காண்டி அம்மனின் எல்லைக்குள் அமர்ந்துள்ளதால் ஸ்ரீ பெரியக் காண்டி அம்மனுக்கு நமது கோவிலின் உள்ளே சன்னதி அமைத்து தினசரி 3 கால நிவேதனம் செய்து அனைத்து வகையான பூஜைகளும் செய்யப் படுகிறது

 

தெய்வங்கள் மற்றும் ஆயுதம்

ஸ்வாமி ஆயுதம்
ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன் கரகம்
ஸ்ரீ வீரிய பெருமாள் பிரம்பு
ஸ்ரீ வீரப்ப சுவாமி அருவாள்(2)
ஸ்ரீ பெரியக் காண்டி அம்மன் கரகம்
ஸ்ரீ் சப்த கன்னிமார் கரகம்
ஸ்ரீ் வீரமலையான்டி துண்டு தடி/கோர்வை தடி
ஸ்ரீ மதுரை வீரன் துண்டு தடி/கோர்வை தடி
ஸ்ரீ சாம்ப மூர்த்தி துண்டு தடி/கோர்வை தடி

 

தலவிருட்சம்

எலுமிச்சை மரம் - கோவிலின் உள்ளே உள்ளது

தல தீர்த்தம்

விசுவப்ப நாயக்கர் குளம் - பொற்றாமறை குளம் - காவிரி நீர் - குடமுருட்டி வாய்க்கால் மூலமாக தற்போதய கோர்ட் பாலம் அருகிலிருந்து தண்ணீர் வருகிறது. (ராஜா விசுவப்ப நாயக்கரால் இடம் அளிக்க பட்டு, மந்திரி அரிய நாத முதலியாரால் நிர்மாணிக்கப் பட்டது,)

மற்ற தகவல் :
1. நமது குளத்திற்கு வடபுறம் உள்ள இடம் சுடுகாடாக இருந்த போது, அதன் நீர் வசதிக்காக குளம் இருந்ததாகவும், அதனை கோவிலுக்கு அளித்ததாகவும் தகவல் உள்ளது.

2. நமது கோவில் உள்ள இடம் - வழித் தடமாக இருந்ததால் அந்த காலத்தில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டி இளைப்பாரும் இடமாக இருந்ததாகவும் தகவல் உள்ளது

 

 

 

பூஜைகள்

காலை 7 மணி
மதியம் 12 மணி
மாலை 7 மணி
கோவில் திறப்பு நேரம்
காலை 06.30 - மதியம் 12.15 வரை
மாலை 05.30 - இரவு 08.30 வரை

உத்திர நட்சத்திர பூஜை

10-05-14 - சித் 27 - சனி
06-06-14 - வை 23 - வெள்ளி
04-07-14 - ஆனி 20 - வெள்ளி (ஜனனம்)
31-07-14 - ஆடி 15 - வியாழன்
27-08-14 - ஆவணி 11 - புதன்
23-09-14 - புரட் 7 - செவ்
21-10-14 - ஐப் 4 - செவ்
17-11-14 - கார் 1 - திங்கள்
14-12-14 - கார் 28 - ஞாயிறு
11-01-15 - மார் 27 - ஞாயிறு
07-02-15 - தை 24 - சனி
06-03-15 - மாசி 22 - வெள்ளி
03-04-15 - பங் 20 - வெள்ளி

வருட பூஜைகள்

ஆடி 18 - 03-08-14 ஆடி 18 பூஜை (மதியம்)
மாசி 5 - 17-02-14 மஹா சிவராத்திரி (இரவு)

ஆனி உத்திரம் - 04-07-14
       பெரியநாச்சி ஜனன நட்சத்திரம்
ஆனி 26 - 10-07-14 - கும்பாபிஷேக நட்சத்திரம் (கேட்டை)
புரட் 5 - 21-09-14 நாகர் பூஜை(ஆயில்யம்)