001c.jpg

DSC_0461_c.jpg

DSC_0553.jpg

கோத்திரம் - குடிமக்கள் - கோவில் வீடு

நமது கோவில் குடி மக்களின் கோத்திரம் மற்றும் அவர்கள் வழிபடும் கோவில் வீடுகள் பற்றிய தகவல்கள்:

கோத்திரம்

நமது கோவிலில் ஐந்து கோத்திர குடி மக்கள் உள்ளனர். அவைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

  1. பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம் ஸ்ரீ வீரிய பெருமாள் பரம்பரையினர்
  2. தென்னவராயன் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் வழி வந்தவர்கள்
  3. பயிராலழக மகரிஷி கோத்திரம் - நமது பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று, பின்னாளில் இணைந்தவர்கள்
  4. பாக்குடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
  5. மாத்துடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் விரிப்பு, ஜமுக்காளம் கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்

இந்த 5 கோத்திர குடிமக்கள் தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் தத்தம் தொழில் சம்பந்தமாக குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

கோவில் வீடு

முந்தைய காலங்களில், நமது முன்னோர்கள் கோவிலுக்கு வருவதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், நமது ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று தங்களது இருப்பிடங்களில் கோவில் வீடு அமைத்து வழிபாடு செய்து வந்தனர். இக்கோவில் வீடுகளை கோத்திர வாரியாக தொகுத்து கொடுத்துள்ளோம். விரிவான விவரங்களுக்கு அந்தந்த பக்கங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும். இப்போதும், இந்த கோவில் வீடுகளில் வருடாந்திற சிறப்பு பூஜைகள், மற்றும் தினசரி பூஜைகள் நடைப் பெற்று வருகிறது

  1. பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம்
    வேங்காம்பட்டி - ஸ்ரீ் வீரம்மாள், ஸ்ரீ் நல்லம்மாள், ஸ்ரீ் சின்னம்மாள் கோவில்
    கண்ணூர்பட்டி(நாமக்கல்) -   ஸ்ரீ் வெங்கடாசலபதி-அலமேலு மங்கை கோவில்
  2. தென்னவராயன் மகரிஷி கோத்திரம்
    புலியூர் - ஸ்ரீ் பச்சநாச்சியம்மன் கோவில்
    நத்தம் - ஸ்ரீ் பச்சநாச்சியம்மன் கோவில்
  3. பயிராலழக மகரிஷி கோத்திரம் - மணமேடு, ஜேடர் பாளையம் - தகவல் இல்லை
  4. பாக்குடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
  5. மாத்துடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் விரிப்பு, ஜமுக்காளம் கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
பூஜைகள்

காலை 7 மணி
மதியம் 12 மணி
மாலை 7 மணி
கோவில் திறப்பு நேரம்
காலை 06.30 - மதியம் 12.15 வரை
மாலை 05.30 - இரவு 08.30 வரை

உத்திர நட்சத்திர பூஜை

10-05-14 - சித் 27 - சனி
06-06-14 - வை 23 - வெள்ளி
04-07-14 - ஆனி 20 - வெள்ளி (ஜனனம்)
31-07-14 - ஆடி 15 - வியாழன்
27-08-14 - ஆவணி 11 - புதன்
23-09-14 - புரட் 7 - செவ்
21-10-14 - ஐப் 4 - செவ்
17-11-14 - கார் 1 - திங்கள்
14-12-14 - கார் 28 - ஞாயிறு
11-01-15 - மார் 27 - ஞாயிறு
07-02-15 - தை 24 - சனி
06-03-15 - மாசி 22 - வெள்ளி
03-04-15 - பங் 20 - வெள்ளி

வருட பூஜைகள்

ஆடி 18 - 03-08-14 ஆடி 18 பூஜை (மதியம்)
மாசி 5 - 17-02-14 மஹா சிவராத்திரி (இரவு)

ஆனி உத்திரம் - 04-07-14
       பெரியநாச்சி ஜனன நட்சத்திரம்
ஆனி 26 - 10-07-14 - கும்பாபிஷேக நட்சத்திரம் (கேட்டை)
புரட் 5 - 21-09-14 நாகர் பூஜை(ஆயில்யம்)