நத்தம் ஸ்ரீ் வீரம்மாள் கோவில் - குடி தெய்வம்

பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர, வேங்காம்பட்டி கோவிலை சார்ந்த ஓரு குடும்பத்தினரின்(திரு. கொந்தாளி செட்டியார் பரம்பரை (சுமார் ஐந்து(5) தலைமுறைக்கு முந்தைய)) வழியில் வந்த குடும்பத்தினர் சுமார் 50 குடிமக்கள்(தலைக்கட்டு) ஸ்ரீ் வீரம்மாளுக்கு 24-11-2013-ம் தேதியன்று(விஜய வருடம் கார்த்திகை 8-ம் நாள், கிருஷ்ண பக்ஷ சப்தமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில்)  பிடிமண் வைத்து, வாஸ்து பூஜை மற்றும் கோவில் ஸ்தாபன பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோவில் குடிமக்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டு வருகிறது.


நத்தம் தெய்வத்திரு.கணபதி செட்டியார் மகன் திரு.ராமச்சந்திரன் அவர்கள் இக்கோவிலுக்காக நத்தம்-கொட்டாம்பட்டி சாலையில் அம்மன் குளம் அருகே தனது தென்னந்தோப்பில் சுமார் 20 சென்ட் இடத்தை கொடுத்து, கோவில் கட்டுமான பணிகளை இதர குடிமக்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றார்.
 

மூலம் :

நத்தம் மதுரை சாலையில் புன்னப்பட்டி என்ற இடத்தில் நமது மூதாதையரான திரு. கொந்தாளி செட்டியார் மற்றும் அவரது சகோதரர்கள் செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தனர். திரு. கொந்தாளி செட்டியார் அவர்களின் வீரம்மாள் என்ற மகளை சீறும் சிறப்புமாக வளர்த்து வந்துள்ளனர்.

வீரம்மாள் வளர்ந்து திருமணப் பருவ நிலையில் இருந்த போது, உள்ளூரில் இருந்த மைனர் மூலம் தொந்தரவு வந்ததால், வீரம்மாள் தனது வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த ஓடையில் குதித்துள்ளார், அப்போதும் முடிவு வராததால், தனது வீட்டின் பின்னால் இருந்த ஓலைகளை வைத்து தீ மூட்டி அதனுள் சென்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

கன்னி தெய்வம் :

பின்னாளில் அவரது குடும்பத்தினருக்கு காட்சி கொடுத்து, தான் குடி தெய்வமாகி விட்டதாகவும், தன்னை கன்னி தெய்வமாக எடுத்து வழிபடுமாறும், தனது குடும்பத்தினரை காத்தருள்வதாகவும் உறுதி அளித்துள்ளார். எனவே, வீரம்மாளை அவரது குடும்பத்தினர் அவர்கள் காலம் மட்டும் வழிபாடு செய்து வந்துள்ளனர். அதன் பின்னால் வந்தவர்கள் நான்கு(4) தலைமுறைகளாக வழிபாடு செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது ஏன்? எப்படி?

இதற்கிடையில் தற்போதய குடிமக்கள் பெரும்பாலோர் வசதியிலந்து, நசிவுற்று, வருமையுடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தங்களது குடும்ப தேவைகளுக்காக(விருத்தி, வசதி முதலான) ஜாதகம், ஜோசியம் முதலானவை பார்க்கும் போதெல்லாம், நமது குடும்பத்தில் கன்னி தெய்வம் உள்ளதாகவும், எடுத்து வழிபடுமாறும் தகவல் வந்துள்ளது, ஆனால், தனி மனிதனாகவோ, தனி குடும்பமாகவோ வழிபட வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எதுவும் செய்யாமலோ அல்லது குடும்ப அளவில் வழிபாடு செய்தோ வந்துள்ளனர்.

நாக வடிவில் வீரம்மாள்

இந்த நிலையில் நமது குடிமக்கள் சிலரது வீட்டில் நமது வீரம்மாள் நாக வடிவில் சென்று வந்ததால், நாகம் வந்ததற்கான காரணத்தை ஜோசியம், சாமி பார்த்த போது, தான் தான் நாக வடிவில் வந்ததாகவும், தன்னால் தான் இருக்கும் இடத்தில் இருக்க முடிய வில்லை என்றும், தன்னை தற்போதய இடத்திலிருந்து எடுத்து சென்று கோவில் கட்டி வழிபடுமாறும் தகவல் வந்துள்ளது.

திருச்சி, ஸ்ரீ் பெரியநாச்சியம்மன் கோவிலில் உத்தரவு

பின்னர், நமது பெரும்பாலான குடிமக்களுக்கு தகவல் தெரிவித்து, திருச்சி, ஸ்ரீ் பெரியநாச்சியம்மன் கோவிலில் உத்தரவு வாங்கி, அருகிலுள்ள கோவில் வீட்டில் கடந்த 16-10-2013-ம் தேதி கோடங்கி வைத்து சாமி பார்த்த போது -  பெயர், யார்? இருப்பிடம், வழிபாடு முறை, புதிய கோவில் அமைப்பு மற்றும் இதர தகவல்கள் கிடைத்தது.

குறிப்பு : இதற்கு முன்னர், பல இடங்களில், சாமி பார்த்து, குறி கேட்ட போதும், நமது பெரியநாச்சியம்மனிடம் உத்தரவு வாங்கிய பின்னரே, அனைத்து வேலைகளும் ஆரம்பமானது என்பது நமது மூல தெய்வத்தின் அருளால் எல்லாம் தானாக நடை பெற ஆரம்பித்துள்ளதும் தெளிவாக விளங்குகிறது.

பிடிமண் எடுத்தல் :

பின்னர் 20-11-2013 அன்று நத்தத்தில் கோடங்கி வைத்து சாமி அழைத்த போது, தன்னை உடன் அழைத்து சென்று 24-11-2013 அன்று கோவில் ஸ்தாபன பூஜை செய்து கோவில் கட்ட ஏற்பாடு செய்யுமாறு தகவல் வந்தது. மேலும், தான் இருக்கும் இடத்தையும், பிடிமண் எடுக்கும் இடத்தையும் காண்பிப்பதாகவும் சொன்னது. இதற்கிடையில் கிடைத்த தகவல் படி, பிடிமண் எடுக்க சென்ற போது, அவ்வூரில் உள்ள சில மக்களால் தடங்கல்கள் ஏற்ப்பட்டது. பின்னர், தடங்கள் செய்தவர்கள் வீட்டில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதால், அவர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் வந்து எடுத்து கொள்ளலாம் என்றனர்.

இதற்கிடையில் 21-11-2013 & 23-11-2013 ஆகிய தினங்களில் நமது குடிமக்களால் பிடிமண் எடுத்து வரப்பட்டு, திரு.ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் வைத்து பூஜை, நைவேத்யம் மற்றும் ஆராதனைகள் செய்யப் பட்டது.

24-11-2013(ஞாயிறு)-ம் தேதி,  நமது குடிமக்கள் அனைவரும் சேர்ந்து ராமச்சந்திரன் அவர்கள் வீட்டிலிருந்து பிடிமண் முதலான பூஜை பொருட்கள் மற்றும் சீர் வரிசைகளுடன் அம்மனை அழைத்து, மாரியம்மன் கோவில் வழியாக அம்மன் குளம் சென்றடைந்தனர். பின்னர், அம்மன் குளத்தில் கலசங்களில் தீர்த்தம் நிரப்பி, குடிமக்களில் ஆடவர்களை வரிசையாக நிறுத்தப்பட்டு K. நாகராஜனுக்கு பூசாரி பட்டம் பிடிக்கப் பட்டது.

கோவில் ஸ்தாபித பூஜை மற்றும் வாஸ்து பூஜை(24-11-2013)

பின்னர், அம்மன் குளத்திலிருந்து, வீரம்மாளை அழைத்து, தற்போதய கோவில் நிர்மாணம் செய்யப் படும் இடத்திற்கு அழைத்து வந்து, பிடிமண் முதலான பொருட்களை  கர்ப்பக்ரஹம் இருக்கும் இடத்தில் சமர்ப்பிக்க பட்டது. பின்னர்,  கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்து பூஜை முதலானவை செய்து கோவில் ஸ்தாபித பூர்ணாஹூதி செய்யப் பட்டது. பின்னர், பொங்கல் முதலியன செய்து மாலையில் படையல் செய்யப் பட்டது.

வீரம்மாள் - கன்னிப் பெண்ணின் நலினம், பூரிப்பு, சந்தோசம்

வரும் வழி முழுவதும் வீரம்மாள் காலில் சலங்கை கட்டி சிறு நடனம் ஆடியும்(உடன் வந்த பெண்களையும் நடனமாட சொல்லியும்), புன்னகையுடனும், சிறு அழுகையுடனும், கோபமாகவும், சாந்தமாகவும், ஒரு கன்னிப் பெண்ணிற்குரிய நலினத்தோடும், நாணத்தோடும், வெட்கத்தோடும், குறுகுறுப்புடனும், கை தட்டியும், சந்தோசமாகவும், குதூகலமாகவும் ஆரவாரத்துடன் ஆனந்தமாக தன் புதிய இருப்பிடம் வந்தடைந்தாள். இதனை நேரில் கண்டவர்கள் மகிழ்ச்சியுடன் ஆனந்தமடைந்தனர்.

வீரம்மாள் புதிய இருப்பிடம் வந்தடைந்தவுடன், நமது குடிமக்களில் சிலருக்கு குறி சொன்னார்.

பூஜை, படையல் ஏற்று - வாக்கருளல்

இறுதியாக, குடிமக்கள் அளித்த படையல் முதலானவற்றை ஏற்றுக் கொண்டதாகவும், தாம் சந்தோசமாக இருப்பதாகவும், குடிமக்களை வரும் காலங்களில் தற்போதய சங்கடம், கஷ்டம் முதலியவற்றில் இருந்து காத்தருள்வதாகவும், நியாயமான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக நமது வீரம்மாள் வாக்கு கொடுத்துள்ளாள்.

கிள்ளி கொடு... அள்ளி கொடுக்கிறேன் :

நம் வீரம்மாள், நமது குடிமக்களிடம்

"நீ கிள்ளி கொடு, நான் அள்ளி கொடுக்கிறேன்"

என்று வாக்கு கொடுத்துள்ளது.

எனவே, நமது குடிமக்கள் அவர்களால் இயன்றயவற்றை நமது வீரம்மாளுக்கு, பொருளாகவோ, நிதியாகவோ தாராளமாக கொடுத்து, கோவில் நிர்மாண செலவு, பணிகளில் தங்களை ஈடுபத்தி கொண்டு வீரம்மாளின் அருளை பெறுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கிள்ளி கொடுப்பதற்கும், அவளுக்கு தேவையானவற்றை நம் குடி மக்களிடம் இருந்து பெற்று கொள்வதற்கும் வீரம்மாள் அருள் புரிவாளாக!.

கோவில் கட்டுமான பணிகள்

இப்போது சில குடிமக்களின் முயற்சியாலும், பண உதவிகளாலும் முதல்கட்ட கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து, அடுத்த கட்ட கட்டுமான பணிகள் நடத்த ஆயத்தமாகி உள்ளது, இதற்குரிய செலவினங்களுக்குரிய பணம் முதலானவற்றை, இதர குடிமக்கள் தாராளமாக கொடுத்து அம்மன் கோவில் கட்டுமான பணிகளில் பங்கேற்குமாறு கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.

சாமி உருவ அமைப்பு :

2014 சித்ரா பௌர்ணமிக்கு முன் கோடங்கி வைத்து சாமி கேட்டதில், வீரம்மாள் தனக்கு கீழே குறிப்பிட்டுள்ள வகையில் சிலை செய்யுமாறும், இதர பரிவார தெய்வங்களின் தகவலை சொல்லியுள்ளது.
மேலும், தனக்குரிய சிலை மற்றும் முக்கிய செலவுகளில் அனைத்து குடிமக்களிடம் இருந்து பங்கு பணம் பெற்று பணிகளை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. தனிமனிதனாக செலவு செய்து, பின்னாளில் உரிமை கொண்டாதுவதில் விருப்பமில்லை என்றும் தகவல் வந்துள்ளது.

 

சாமி உருவ அமைப்பு
பொருள் பஞ்சலோகம்
நிலை அமர்ந்த நிலை(ஒரு கால் மடித்து, ஒரு கால் தொங்கிய நிலை)
(மாரியம்மன் உருவம் போன்ற)
 வலது கை கத்தி
இடது கை தாமரை சென்டு
 மார்பு  பதக்கம்
 மூக்குத்தி  முத்து
  இதர தகவல்
 வாசல் மேல்  ஸ்ரீ் கஜலக்ஷ்மி கல் சிலை
பரிவார தெய்வங்கள்
(கல்/சிமெண்ட் சிலை)
மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன்
(குடும்ப சகிதமாக) - காவல் தெய்வமாக
பிற தெய்வங்கள் விநாயகர்

 

சாமியாடி தேர்வு : திருச்சி  K. நாகராஜன்(பாலக்கரை உடையான் தோட்டம் வீ. கைலாசம் செட்டியார் மகன்) 24-11-2013 அன்று நத்தம் அம்மன் குளக் கரையில் உத்தரவு தரப் பட்டது. மற்றும் முகுந்தன் உள்ளூரில் பூசாரியாக செயல் படவும் உத்தரவு வந்துள்ளது.