கண்ணூர்பட்டி - ஸ்ரீ் வெங்கடாசலபதி-அலமேலு மங்கை கோவில் வீடு -பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம்

நாமக்கல் - கண்ணூர்பட்டியில் ஸ்ரீ் வெங்கடாசலபதி-அலமேலு மங்கை கோவில் வீடாக வைத்து பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரத்தை சேர்ந்த சுமார் 60 குடும்பங்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்

வருடாந்திர பூஜை
    - புரட்டாசி மாதம் 3வது சனிக் கிழமை தளிகை செய்து வழிபாடு செய்யப் படுகிறது

வரலாறு :

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக திரு. நாராயணன் செட்டியார் மற்றும் திரு. குள்ளையன் செட்டியார் ஆகியவர்களிடம் காலப்பநாயக்கன் பட்டியிலிருந்து "ராமர் பெட்டி, பிரம்பு மூலம் அடங்கிய திருமண் பெட்டி"  கொண்டு வந்து தரப்பட்டது. இவர்களும், சந்ததியினரும் திருமண் பெட்டியை வைத்து தினமும் நைவேத்யம் செய்து வழிபாடு செய்து வந்தார்கள். பின்னர் கோவில் வீடு அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர்

கோவில் வீடு தெய்வங்கள்:

மூலஸ்தானம் - 7 இலை போட்டு தளிகை செய்யப் படுகிறது (தளிகை 1, 1, 1)

 • ஏழுமலையான் (படம், பதுவு)(திருவேங்கடமுடையான்)
 • பெரிய நாச்சியம்மன், வீரியப் பெருமாள் (படம், பதுவு)
 • கருட கம்பம்(இரும்பு) - சுமார் 4 அடி
 • பட்டவன் : (முன்னோர்) -பதுவு (நாராயணன் செட்டியார்)

வழிபாடு முறை :

கோஷ்டியாக வீடு, வீடாக சென்று, பெருமாள் பாட்டு பாடி, உபதானம் வாங்கி(பிச்சை எடுத்து) அன்னதானம் செய்ய வேண்டும்.

பிரசாதம் :

ஸ்ரீ் பெருமாள் : தீர்த்தம், திருத்துழாய்(துளசி), சடாரி
ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன், ஸ்ரீ் வீரியப் பெருமாள் : விபூதி, குங்குமம்

தெய்வ உத்தரவு படி - சமுகத்தினரால் பின்பற்றப் படுபவை :

 • ஆவணி 28 முதல் பகவானை/உத்தரவை எதிர்ப் பார்த்து இருத்தல்(பூஜை காலம்)
 • மகளும், மருமகளும் சமம்(பிறந்த & புகுந்த பிள்ளைகளும் சமம்)
 • மாயவன் கொடுத்ததை மறைக்காமல் மாயவனுக்கே சமர்ப்பிப்பது
 • ஆவணி 28 முதல் புரட்டாசி முடியும் வரை விளக்கு எரியும் இடம் எல்லாம் வீடு என்று நினைத்து சாப்பிடக் கூடாது
  (காரணம் : ஸ்ரீ் பெரியநாச்சியால் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் காரணத்தால் சாப்பிடக் கூடாது என்பது பெரியோரின் வாக்கு)
 • 3 நாள், 6 பொழுது பகவானை கைகட்டி, வாய்கட்டி, சேவித்து மலையேற்றுவது

பரம்பரை விவரம் :

நாராயணன் செட்டியார்(கோவில் வீடு உருவாக்கியவர்)
    -- கிருஷ்ணன் செட்டியார்
    -- குண்டன் செட்டியார்
    -- குள்ளன் செட்டியார்
    -- நல்லதம்பி செட்டியார்(ஏழுமலை தாத்தா)
ராமசாமி செட்டியார்
மண்ணச்ச நல்லூர் பால்கார நடேசன் செட்டியார்  முன்னோர்கள்
பாலக்கரை வழுக்கையன் செட்டியார் முன்னோர்கள்

தற்போதய காரியதரிசிகள்

முதல் பிரிவு - 10 குடும்பம்

திரு. S. ஏழுமலையான் செட்டியார், திருச்சி, த/பெ சீனிவாசன் செட்டியார்
    - மணியடித்து பூஜை செய்பவர்
திரு. V. ஜெயராமன் செட்டியார், திருச்சி, த/பெ வெங்கடாசலம் செட்டியார்

இரண்டாம் பிரிவு - 50 குடும்பம்

திரு.  செந்தில், காலப்பநாயக்கன் பட்டி  - சாமியாடி
திரு.  செல்வம், இடையப் பட்டி - மணியடிப்பவர்

இருப்பிடம் :

கண்ணூர்பட்டி கிராமம்
நாமக்கல்-புதுச்சத்திரம்(கிழக்கு திசை)
கொல்லிமலை ரோடு(2வது மைல்)

தொடர்புக்கு : திரு. S. ஏழுமலையான் செட்டியார், திருச்சி  +91-98946-06660

தகவல் : S. ஏழுமலையான் செட்டியார், திருச்சி +91-98946-06660
ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில், திருச்சி, 04-Aug-2013(ஆடி 19),

இருப்பிடம்

கண்ணூர்பட்டி கிராமம்
நாமக்கல்-புதுச்சத்திரம்(கிழக்கு திசை)
கொல்லிமலை ரோடு(2வது மைல்)
நாமக்கல் மாவட்டம் - 637 014

வழித் தடங்கள்

நாமக்கல் - சேலம் வழி
புதுச் சத்திரம் நிறுத்தம்

பஸ் ரூட் : நாமக்கல்
காலை : 5.00, 6.50, 8.40, 10.40
மாலை : 2.00, 3.30, 6.15, 7.30
புதுச் சத்திரம் பஸ் நிலையம்
மினிபஸ் (A.P.S, P.K.S) : 6.30, 7.30, 9.15, 12.00, 2.00, 3.00, 5.00, 7.15, 9.15

கோவில் சாவி ???? பட்டி
???? செட்டியாரிடம் உள்ளது

விழாக்கால நேரங்கள்

புரட்டாசி சனிக்கிழமை


 

தகவல், தொடர்புக்கு

S. ஏழுமலையான் செட்டியார், திருச்சி
✆ : +91-98946-06660

செந்தில், காலப்பநாயக்கன் பட்டி