பருத்திக்குடையான் - வேங்காம்பட்டி கோவில்

பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம் - வேங்காம்பட்டி கோவில், குளித்தலை (அய்யர் மலை அருகில்), திருச்சி

கோவில் வரலாறு :

சுமார் 300 வருடங்களுக்கு முன்னால், நமது மூதாதையர்கள் நங்கவரம் அக்ரஹார பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். அங்கு ஒரு பசுமாடு இறந்துவிட, அங்கிருந்த பிராமண மக்கள் அதனை அப்புறப் படுத்துமாறு நமது சமுகத்தினரை வற்புறுத்தவே, இரவோடு இரவாக சுமார் 10 குடும்பத்தினர் திம்மாச்சிபுரம் தெற்கே உள்ள வீரவல்லி என்ற ஊருக்கு குடி பெயர்ந்து  மாட்டு செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து (பிழைப்பு நடத்தினர்) வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

அக்காலத்தில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்த காரணத்தினால், நமது மூல குல தெய்வம் திருச்சி ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து, பிடிமண் எடுத்து வந்து கோவில் வீடு அமைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர்.

இக்காலக் கட்டத்தில் நமது சமுகத்தினரில் மூன்று நபர்கள் இறந்து விட, அவர்களின் துணைவியார்கள் - ஸ்ரீ் வீரம்மாள், ஸ்ரீ் நல்லம்மாள், ஸ்ரீ் சின்னம்மாள் குடும்பப் பொறுப்பேற்று வழிநடத்தி வந்துள்ளனர். அப்போது ஒரு ஆடி(18) பெருக்கன்று காவிரி நதியில் நீராட சென்றபோது, அவர்கள் மூவரும் ஆற்றில் அடித்து செல்லப் பட்டனர். இதன் பின்னர், ஸ்ரீ் வீரம்மாள், ஸ்ரீ் நல்லம்மாள், ஸ்ரீ் சின்னம்மாள் அகிய மூவரும் நமது சமுகத்தினரின் கனவில் தோன்றி, தங்களை எடுத்து கும்பிடுமாறு சொல்ல, ஏற்கனவே உள்ள கோவில் வீட்டில், அவர்களையும் சேர்த்து வைத்து வழிபாடு செய்து வருகிறோம்.

சுவாமிகள்:

ஸ்ரீ் வீரம்மாள் - ஐம்பொன் சிலை
ஸ்ரீ் நல்லம்மாள் - ஐம்பொன் சிலை
ஸ்ரீ் சின்னம்மாள் - ஐம்பொன் சிலை

வழிபாடு :

முதலில் ஓலைப் பெட்டியில் சுவாமிகளை வைத்திருந்து, வருடம் ஒருமுறை ஆடி 28-அன்று பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் மரப்பெட்டியில் வைத்து வழிப்பட்டுள்ளனர்.

பின்னர் வந்த காலங்களில், நமது குடிமக்கள் சேர்ந்து, கோவில் வீடு அமைத்து வழி பட முடிவெடுத்து, 2000- வருடம் கோவில் வீடு கட்டி கும்பாபிஷேகம் செய்து ஆடி 28-ந்தேதி வருட பூஜையும், தினமும் விளக்கும் ஏற்றி வழிபட்டு வருகிறோம். கடந்த 2009-ம் வருடம், குடமுழுக்கு பூஜைகள் சிறப்பாக செய்துள்ளோம்.

ஐம்பொன் சிலை, விக்ரகம், கோவில் உருவாக்கம் :

தொந்தி செட்டியாரின் மகன் அண்ணாவி செட்டியார், வீரப்ப செட்டியாரின் மகன் சாமி செட்டியார், அவரின் மகன் முத்தையன் செட்டியார், அருணாச்சலம் செட்டியார், மாரிமுத்து செட்டியார், மலையாளத்தன் செட்டியார் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஐம்பொன் சிலைகளை செய்து ஓலைக்குடிசையில் வழிப்பட்டு வந்தனர்.

அதன்பிறகு வந்த தலைமுறைகள் ஓலைக்குடிசை சேதமடைந்த காரணத்தினாலும், ஐம்பொன் சிலைகளின் பாதுகாப்பு கருதியும் பெருமாள் செட்டியாரின் மகன் இராமசாமி செட்டியார் அவர்களின் தலைமையில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதர கோவில் மேம்பாடு :

கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் மதிற்சுவர் எழுப்ப முடிவு செய்து இனுங்கூர் பெரியண்ணன் செட்டியார், எருமப்பட்டி இராஜா(சதாசிவம் செட்டியார்), மண்ணச்ச நல்லூர் சரவணன் செட்டியார், லாலாபேட்டை லோகு செட்டியார், நத்தம் தசரதன் செட்டியார், திருச்சி கார்த்திகேயன் செட்டியார், சங்கிலியாண்ட புரம் வீரப்பன் செட்டியார்,  எடத்தெரு மூக்கன் செட்டியார், V. கிருஷ்ணன் செட்டியார் மற்றும் கோவில் குடிமக்கள் சேர்ந்து சுற்றிலும் மதிற்சுவர் எழுப்பி உள்ளனர்.

ஒவ்வொரு முறையும் சாமி கும்பிடும்போது வெயிலிலும், மழையிலும் நின்று வழிபட மிகவும் சிரமமாக இருந்தது. எனவே திருச்சி இராமசாமி செட்டியார் அவர்களின் மனைவி லேட் தனத்தம்மாளின் எண்ணத்தை நிறைவற்றும் பொருட்டு அவரின் நினைவாக கோவிலின் முன்பு மண்டபம் கட்டி முடிக்கப் பட்டது.


இனுங்கூர் பெரியண்ணன் செட்டியார் வகையராக்கள் சேர்ந்து கோவிலுக்கு ஆழ்குழாய் கிணறு போட்டு டேங்க் கட்டி கொடுத்துள்ளனர் - இதனால் தண்ணீர் பிரச்னை தீர்ந்தது
கோவில் கருவரை சாவி வேங்காம் பட்டியில் வசிக்கும் பூசாரி இராமு செட்டியார் அவர்களிடம் உள்ளது.

Paruthikudaiyan Magarishi Gothram - Vengampatti Temple(Related to Sri Periyanachi Amman Temple, Trichy), Vengampatti, Karuppathur Village, Krishnarayapuram Taluk, Kulithalai, Karur District.

இருப்பிடம்

வேங்காம் பட்டி
கருப்பத்தூர் கிராமம்
கிருஷ்ணராயபுரம் தாலுகா
குளித்தலை(அய்யர் மலை அருகில்)
கரூர் மாவட்டம்
கோவில் சாவி வேங்காம் பட்டி
பூசாரி இராமு செட்டியாரிடம் உள்ளது

விழாக்கால நேரங்கள்

பிரதி தமிழ் மாத முதல் தேதி
ஆடி 28,
தை பொங்கல்

வழித் தடங்கள்

திருச்சி-குளித்தலை வழியாக 48கி.மீ
கருர்-லாலாபேட்டை வழியாக 45 கி.மீபஸ் ரூட் : குளித்தலை-பஞ்சப்பட்டி வழி வயலூர் டவுன் பஸ்
காலை : 5.00, 6.50, 8.40, 10.40
மாலை : 2.00, 3.30, 6.15, 7.30
குளித்தலை பஸ் நிலையம்

மினிபஸ் (A.P.S, P.K.S) : 6.30, 7.30, 9.15, 12.00, 2.00, 3.00, 5.00, 7.15, 9.15

தகவல், தொடர்புக்கு

பெ. ராமசாமி செட்டியார், திருச்சி,
(தேங்காய் வியாபாரம்) -
Phone : 0431-2412194

ஆ. பெரியண்ணன் செட்டியார், இனுங்கூர்
Cell : 97919-68843

பூசாரி : கோ. ராமநாதன் செட்டியார்,
வேங்காம்பட்டி