நத்தம் ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் கோவில் வீடு - தென்னவராயன் மகரிஷி கோத்திரம்

குலம் தழைத்து குலம் வாழ/காக்க குல தெய்வ வழிபாடே சிறப்பை தரும்

ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் திருநட்சத்திரம் : உத்திரம்

தகவல் : திருச்சி ஸ்ரீ் பெரிய நாச்சியம்மனின் திருநட்சத்திரமும் உத்திரம் ஆகும்
நமது அம்மனின் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு செய்வது சாலச் சிறந்தது

இருப்பிடம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், மெய்யம்பட்டி, கொட்டாம்பட்டி ரோடு

ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் காயத்ரி

ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
         பத்ம ஹஸ்தாய தீமஹி
         தந்நோ பச்ச நாச்சி ப்ரசோதயாத்!

ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் துதி:

தாழம்பூ கொன்றையும் கையில் தாமரை மலரும் ஏந்தி
கழுத்தினில் சென்பக மாலையும் சாத்தும் இரசைமாநகர
தென்னவராய மகரிஷி குடிகளை காக்கும் உமை மைந்தாளே
உலகாலும் பெற்ற சீர் அந்த பச்ச நாச்சியே எப்போதும்
என் சிந்தனையேன் காரமர்மேனிக் கணபதியே நிர்க்கக் கட்டுரையே!

ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் போற்றி

பச்சை நிற மேனி கொண்டு பவளநிற முகம் கொண்டு
        தாமரை விழி கொண்டு தலையிலே தாழம்பூ யேந்தி
        தரணியில் புகழ் பாடும் எங்கள் குல நாயகியே போற்றி போற்றி.
காவிரி கொள்ளிடம் கரைகண்ட நாயகியின் மகளே போற்றி போற்றி.
வைணவ குலத்தின் வாரிசில் உதித்த தெய்வநாயகியே போற்றி போற்றி.
மண் உலகை வென்று விண் உலகம் நின்று
        எங்கள் குலம் காக்கும் தேவியே போற்றி போற்றி.
அக்னியில் ஆட்கொண்டு ஆண்டவனில் அருள்பெற்ற நாயகியே போற்றி போற்றி.
ஆடியிலே அம்மை அப்பனின் மணக்கோலம் கண்டு
        மனம் மகிழ்ந்த தாரகையே போற்றி போற்றி.
உன் திருக்காட்சி கண்டு எங்கள் மனம் குளிர வைத்தாயே போற்றி போற்றி.

மூலம்:

 • சுமார் மூன்று தலைமுறைக்கு முன்னால் குள்ளஞ் செட்டியார் & வீரமலை செட்டியாரால் திருச்சி ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்துச் சென்று நத்தம் அருகே பள்ளப்பட்டியில் கோவில் வீடு ஸ்தாபிக்கப் பட்டது
 • ஆரம்பத்தில் வயல்வெளியில் பனை ஓலை குடிசையில் மாடத்தில் சுட்டி விளக்கு வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர்.
 •  பெரிய நாச்சியம்மன் நம் குல பெண்களின் மூலம் அருள் வந்து ஸ்ரீ் பச்சநாச்சி அம்மன் என பெயரிட்டு வழிபட சொல்லியதால் அப்பெயரில் வழிபாடு செய்யப் படுகிறது.

குடிமக்கள் :(42 தலைக்கட்டு குடும்பங்கள்)

42 தலைக்கட்டு குடும்பம்(2013 வருட கணக்கு விவரப் படி) வழிபாடு செய்கிறது (குள்ளாஞ் செட்டியார், வீரமலை செட்டியார் வகையரா). இக்கோவில் அவர்களுக்கு மட்டுமே பத்தியப் பட்டதாகும். (இதர தென்னவராய கோத்திர மக்களுக்கு வழிபாடு தவிர எந்த பாத்தியமும், உரிமையும் கிடையாது)

அதிசய தகவல் :

ஆரம்பத்தில் வயல்வெளியில் பனை ஓலை குடிசையில் மாடத்தில் சுட்டி விளக்கு வைத்து வழிபாடு செய்த காலத்தில் எண்ணை முதலான பொருட்களுக்காக காத்திருக்காமல், இருக்கும் இடத்தில் பச்சை தண்ணீரில் விளக்கு ஏற்றி வைத்து வழிப் பட்டுள்ளனர். இது ஒரு அரிய விசயமாகும்.

ஸ்ரீ் பெரிய நாச்சியே ஸ்ரீ் பச்சநாச்சியாக (கன்னி தெய்வமாக) அருள் புரிவதாக தகவல் உள்ளது

வழக்கம் :

 • வாரிசுகளின் முதல் முடி காணிக்கை - திருச்சி ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவிலுக்கு வழங்கப் படுகிறது.
 • ஸ்ரீ் பச்சநாச்சியை கன்னிப் பெண்ணாக வழிபாடு செய்து வருகிறோம் 

கோவில் வீடு தெய்வங்கள் - மூலஸ்தானம் :

 1. பச்சநாச்சி அம்மன் - ஐம்பொன் சிலை
 2. பெரிய நாச்சியம்மன், வீரியப் பெருமாள், பச்சநாச்சி அம்மன்(சிறிய ஐம்பொன் விக்ரகம்) (பெட்டியில்)
 3. வீரப்பசாமி - 2 அருவாள்(இரண்டு)
 4. விநாயகர் - கல் சிலை
 5. மதுரை வீரன் - திட்டு தடி, அருவாள்
 6. சங்கிலி கருப்பு - திட்டு பிரம்பு, அருவாள்
 7. நாகக் கன்னி - கல் சிலை - வேம்பு & அரசு உள்ள இடத்தில் ஸ்தாபிதம் செய்யப் பட்டுள்ளது.

கோவில் மத்துசம் :

 • சாமிகளுக்கு : ஒண்டி கருப்பு சாமி, மருளாளி - V. மோகன்
 • கோவில் சார்பான மத்துசம் : நத்தம் கோ.சு. ச. சுப்ரமணியன் செட்டியார் -
  (பெருமாள் மலை பிச்சாயி அம்மன் கோவில் சார்ந்தவர்)

பூஜை முறை மற்றும் காலம் :

 1. பிறதி மாதம் பௌர்ணமி - கஞ்சி படைத்து, வழிபாடு செய்யப் படுகிறது.(சில மாதம் பொங்கலும் படைக்க படுகிறது) - ஸ்ரீ் பச்சநாச்சி அம்மன் தான் பசியுடன் இருப்பதாகவும், மாதம் ஒரு முறை கஞ்சியாவது வைத்து வழிபட  கேட்டுக் கொண்ட படி கஞ்சி படைத்து வழிபாடு செய்யப் படுகிறது.
 2. வருடம் ஒரு முறை - ஆடி 28 பச்சை சுத்த பூஜை
 3. மூன்று(3) வருடத்திற்கு ஒரு முறை - ஆடி 28 - பெரும் பச்சை பூஜை(3 நாள்)

பெரும் பச்சை பூஜையின் நிறைவு நாளன்று குறி சொல்லப் படுகிறது

அருள்மிகு பச்ச நாச்சியம்மன் திருகோவில் ஆடி 28-ம் பெரும்பூஜையும்
அருள்மிகு ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் சமேத ஸ்ரீ் வீரிய பெருமாள்
சுவாமிகளுக்கு தெய்வீக திருக்கல்யாண உற்சவம்

குறி சொல்லும் முறை :

பச்சை தண்ணீரில் விளக்கு ஏற்றி (ஒரு விளக்கு எரிந்து முடியும் வரை) கீழ் உள்ள முறை படி குறி சொல்லப் படுகிறது. இது வீரமலை செட்டியார் மற்றும் குள்ளாஞ் செட்டியார் பரம்பரையில் ஒரு குடியில் பிறந்த கன்னிப் பெண்ணால் 3 வருடத்திற்கு ஒரு முறை குறி சொல்லப் படுகிறது.

 • பிறத்தியார்(வெளியாட்கள்)
 • மாமன் - மச்சினர்
 • பங்காளி - குடி மக்கள்

பெரும் பச்சை பூஜையின் முறை(மூன்று நாள் பூஜை) :

 • அம்மன் குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்து வரப் படுகிறது.
 • மூன்று(3) பச்சை பானைகளில்(சுடாத) பொங்கல்(சர்க்கரை பொங்கல், பால் பொங்கல், வெண் பொங்கல்), சாமியாடிகள் மற்றும் குடும்பத்தாரால் சமைத்து படைக்கப் படுகிறது.
 • கரும்பு பந்தல் அமைத்து வழிபாடு செய்யப் படுகிறது.
 • இவ்வாறு, செய்யும் படையல் முதலான பொருட்களை இரவு பூஜை முடிந்தவுடன், பூட்டி வைத்து, மறுநாள் காலை எடுத்து குடிமக்கள் முதலானவருக்கு விநியோகம் செய்யப் படுகிறது. மீதமுள்ள ப்ரசாதத்தை பசுமாடு முதலான கால்நடைகளுக்கு கொடுக்கப் படுகிறது
 • பச்சை சட்டியில் - சாம்பிராணி இடுதல் : பங்காளிகள் அனைவரும் வெற்று உடம்புடன்(மேல் சட்டை இல்லாமல்), பூ-நூல் தரித்து, சந்தனம் தடவி சாம்பிராணி போட்ட பின்னர்தான் பூஜை ஆரம்பிக்க படுகிறது

மூல வரலாறு :

குள்ளஞ் செட்டியார், வீரமலை செட்டியார் சகோதரர்களில் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக பூஜை முதலான பொருட்களை உறைகேணியில் போட்டு விட்டு சென்று விட்டார்.

அதன் பிறகு, குள்ளாஞ் செட்டியார் முதலானவர்கள் அங்கு வழிபாடு செய்து வந்த அருவாளை பெரிய நாச்சியம்மன் கோவிலில் ஒப்படைக்க வந்த போது, முதலில் ஏற்றுக் கொள்ள வில்லை.

எனவே, கொண்டு வந்த அருவாளால் உடம்பில் தேய்த்த போது உதிரத்திற்கு பதிலாக மல்லிகைப் பூ கொட்டிய போது சாமி அருள் வந்து, நமது குடும்ப பொருளை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னவுடன் பெரிய நாச்சியம்மன் கோவிலில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதுவே, தற்போது, (பெரிய நாச்சியம்மன் கோவிலில் வீரப்ப சாமி அருகில் உள்ள பெரிய அருவாளாகும்(குள்ளஞ் செட்டியார் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது)

தற்போது மேலே குறிப்பிட்டுள்ள உறைகேணியில் கோவில் பொருட்களை போட்ட சகோதரரின் வாரிசு ஒருவர் புத்தி சுவாதீனம் இல்லாமல் தென் பகுதியில் இருப்பதாகவும் தகவல் உள்ளது

குள்ளஞ் செட்டியார், வீரமலை செட்டியார் காலத்திலிருந்து 3 தலைமுறையாக வழிபாடு செய்ய வில்லை.

இதற்கு முன்னர், குள்ளஞ் செட்டியார், வீரமலை செட்டியார் கோவில் வீடு அமைத்து வழிப்பட்ட காலத்தில், அவர்கள் மற்றும் குடும்பத்தினர் மிராசுதார் போன்ற மிக சிறப்பானதொரு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

இந்த கால இடைவெளியில், இந்த குடியில் பிறந்த குடிமக்கள் மிக நலிவுற்று என்னற்ற இன்னல்களை அடைந்து, வறுமையுடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

திரு. V. மோகன் தமது குடும்ப பிரச்னைக்காக தஞ்சாவூரில் ரவி ஆசாரியிடம் (வீணை செய்பவர்) சென்று கைரேகை பார்த்த போது, உங்களது குடும்பத்தில் வழிபாடு செய்து வந்த குலதெய்வ வழிபாடு தடைப்பட்டுள்ளது எனவும், அதனை திரும்ப ஆரம்பித்து செய்ய நேரம் வந்து விட்டதாகவும் தகவல் கிடைத்தது.

ஆனால் மோகன் முதலான குடும்பத்தினருக்கு எங்கு, எப்படி என தகவல் தெரியாததால், அதற்கு விளக்கம் கேட்ட போது, உறைகேணி முதலான இடம் (பத்தடியில் கருப்பு கோவில் இருப்பதாக) பற்றி தகவல் தெரிவிக்கப் பட்டது.

கோவில் நிர்மாணம் :

அதன் பின் 2003-ல் தற்போதய கோவில் நிர்மாணிக்கப் பட்டு வழிபாடு செய்யப் படுகிறது.

கோவில் நிர்மாணம் செய்யப் பட்ட முறை :

ஓலைக்குடிசை முதல் தற்போதய கோவில் :

மேலே ரவி ஆசாரி கூரிய தகவலின் படி, குலதெய்வ வழிபாடு செய்ய உறவின் முறையில் கலந்து ஆலோசித்து, கோவில் கட்ட முடிவு செய்யப் பட்டது.

அதன்படி, மண் கலயத்தில் நவதாணியம், பூ முதலானவை வைத்து பச்சை சேலை, தென்னம்பாளை, தாழம்பூ சேர்த்து வைத்து மண் கலயத்தை கும்பம் போல் பாவித்து ஓலைக்குடிசையில் வைத்து வழிபாடு செய்யப் பட்டது.

அதன் பின்னர், மூன்று(3) மாதம் கழித்து ஓலைக்குடிசை எரிந்து போன போது, உள்ளே உள்ள கும்பம்(கலயம்) மட்டும் எதுவும் ஆகாமல் இருந்ததால், மீண்டும் ரவி ஆசாரியிடம் விளக்கம் கேட்ட போது, கோவில் கட்டி வழிபடுமாறு தகவல் வந்ததால் 2003 தை மாதம் கோவில் நிர்மாண வேலை ஆரம்பித்து 2004-ல் கும்பாபிஷேகம் செய்யப் பட்டு தொடர்ந்து வழிபாடு செய்து வரப் படுகிறது.


கும்பாபிஷேகம் :

09.02.2004 சுபானு வருடம் தை மாதம் 26-ம் நாள் திங்கட்கிழமை திருதியை திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 6.40 - 7.00 மணி வரை - கும்ப லக்னம், சந்திர ஹோரையில் மிக சிறப்பாக நடைப் பெற்றது.

மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தவர் :

சர்வ சாதகம் கும்பாபிஷேக ரத்னாகரம் கும்பாபிஷேக கலாமணி சிவகாம சிரோம்னி
ஸ்ரீ்ரங்கம் திரு.இராஜ ஞான ஸ்கந்த சிவாச்சாரியார்

கும்பாபிஷேகமும் 48 நாள் மண்டலாபிஷேகமும் சிறப்பாக நடைப் பெற்றது

முதலாம் திருப்பணி மஹா கும்பாபிஷேகம் செய்து வைத்தவர்

திரு. வீர. அ. பரமசிவம் செட்டியார் குமாரர் அ. ப. நடராஜன் செட்டியார், நத்தம்

விழா கமிட்டியாளர்கள் :

திரு. வீர. அ. ப. கணேசன் செட்டியார்
திரு. வீர. அ. ராஜாங்கம் செட்டியார்
திரு. கு. ம. மா. கணேசன் செட்டியார்
திரு. வீர. வீ. விஸ்வநாதன் செட்டியார்
திரு. கு. வீ. சீ. மாரியப்பன் செட்டியார்
திரு. கு. ப. காசிலிங்கம் செட்டியார்
திரு. வீர. மு. பி. தர்மராஜ் செட்டியார்


மற்ற தகவல் :

வருடந்தோரும் ஆடி 19 - அன்று நமது நத்தம் பச்சநாச்சி அம்மன் கோவில் சமுகத்தினரால் திருச்சி பெரிய நாச்சியம்மன் அம்மன் கோவிலில் சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் செய்து அன்னதானம் செய்து வரப்படுகிறது. அது சமயம், நமது குடி மக்கள், மற்றும் உறவினர்கள் திருச்சி பெரிய நாச்சியம்மன் கோவிலிற்கு குடும்பமாக வந்ததிருந்து அம்மாவின் அருளை பெற்று வளமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் கோவில் சுவாமியாடிகள் :

 • ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன் பூசாரி - திரு. A.P. நடராஜன்  செட்டியார், நத்தம்
 • பெட்டி சுவாமியாடி - திரு. K.M. கணேசன் செட்டியார், நத்தம்
 • ஸ்ரீ் வீரப்ப சுவாமியாடி - திரு. V. தங்கராசு செட்டியார், திருச்சி
 • ஸ்ரீ் மதுரை வீரன் சுவாமியாடி - திரு. P. கோபால் செட்டியார், மதுரை
 • ஸ்ரீ் சங்கிலி கருப்பு சுவாமியாடி - திரு. S. திலிப் குமார் செட்டியார், நத்தம்
 •  ஸ்ரீ் ஒண்டிக் கருப்பு சுவாமியாடி - திரு. V. மோகன் செட்டியார், திருச்சி

தொடர்புக்கு :

 • A.P. நடராஜன், த/பெ A. பரமசிவம் செட்டியார், நத்தம் - 99437-19850
 • K.M. கணேஷ், த/பெ K. மாணிக்கம் செட்டியார், நத்தம் - 94431 - 46330
 • V. தங்கராசு,  த/பெ விஸ்வநாதன் செட்டியார், திருச்சி(பாலக்கரை) - 99659 - 13112