திருநாம பதிகம்

திருநாம பதிகம்

கண்ணூர் பட்டி கோவிலுக்காக - 12-June-2014

ஆதிபரஞ் சோதியா யண்டபதி ரண்டமாய் நாதியாய் நின்ற நாமற
அடிமுடியி னடுவாகி எளியவன் கனிகூற வன்புவைத் திருத்தநாம
நீதிநெறி யாகவே மணிபூர கந்தணிட் நிலையாக நின்ற நாமம்
நேசமுடனே கருட வாகனமீ தேரியே நின்று விளையாடு நாமம்
வீதி வெளியாகவே யுச்சிமலை மீதினில் விளக்கொளியில் நின்ற நாமம்
மேலாம் பதத்தையும் நாலாம் பதத்தையும் விளங்கக் கொடுக்கு நாமம்
நாதாந்தபேரொளிய தாகவே விளங்கிடு நமோ நமோவென்ற நாமம்
நாராயணாஹரி கோவிந்தா வென்று தினம் நாடிவரு திருநாமமே.              1

ஹரிநமோ வென்றுரைப் போர்க்குமே பாண்டவர்க் கருவாகி நின்ற நாமம்
அருச்சுனர்க்காகவே கதிரோனை மறைத்து நல்லரசு நிலை வைத்த நாமம்
பரிவான கிருஷ்ணாவதாராத்திற் பூதகி பருத்தமுலை யுண்ட நாமம்
பாரினில் கல்லினை மிதித்துப் பெண்ணாகவே பண்பருள் புரிந்த நாமம்
திருமேவு பிரகலா தனன்றனக் காக நர சிங்கமுகமான நாமம்
தேவததி தேவரை யிடுக்கண்வைத்தோர்களைத் திறைகொண்டிருந்த நாமம்
கருவாகி யுருவாகி திருவாகி மருவாகிக் காட்சி தந்திட்ட நாமம்
கரியீச பிரகாச திருநேச பரவாச கருணைதரு திருநாமமே. .                   2

முன்னாளிலேசிவன் றிருக்கையிற் பாணமாய்முப்புர மெரித்த நாமம்
முதலையாய் சிக்கியமக்கரிக் கந்நாளிலாதி மூலமாய் நின்ற நாமம்
பொன்னான ருக்மணி தேவி கல்யாணத்திற்போராய்த் துலைத்த நாமம்
பூதப் பிசாசு பில்லிசூனியமுதல் யாவுமே பொய்யாக்கிவிட்ட நாமம்
சின்னபின்னங்களா யிராவணன் சிர சினைத்திட்டமுடனரிந்த நாமம்
சிரஞ்சீவியாகவே விபீஷ்னன் றனக்குமே ஜெயபட்ட மீந்த நாமம்
கன்னிவயதாகவே கருணா சமுத்ரத்திற் காட்சி தந்தருளு நாமம்
கரயீச பிரகாச திருநேச பரவாச கருணைதரு  திருநாமமே.                   3

எண்ணிரண்டாயிரமிடையர் தம் மாதருக் கிறையாயிருந்த நாமம்
இகலோக பரலோக சொர்க்கலோகமுமுத லோகமாய் நின்ற நாமம்
மண்ணுக்கும் விண்ணுக்கு மொன்றான மாவலியை வனசிறையில் வைத்த நாமம்
மராமர மொருகணையிலுருவவே தொட்டென்று வாலியை வதைத்த நாமம்
ஒன்றிற்குமைந்திற்கும் உண்மையது வாகவே வுந்தியிலுதித்த நாமம்
ஓம் நமோ நாராயணா பரந்தாமாவென ஓதவே நின்ற நாமம்
கண்ணுக்கும் நாசிக்கும் நடுவாகவே நின்று காட்சியே தந்த நாமம்
கரியீச பிரகாச திருநேச பரவாச கருணைதரு  திருநாமமே.                   4

சிலைதனை விளைத்தபின் ஜனகன் மகளான சீதையைமணந்த நாமம்
திருவாங்கேசராய் காவேரி வாசராய்த் திருச்சன்னமான நாமம்
கலையினை யுரிந்திட்ட பாண்டவர்கள் மனைவிக்குக் கருணை தந்திட்ட நாமம்
காலிகடிரண்டிடக் கானகந் தன்னிலே காவலாய் நின்ற நாமம்
மலைதனைச் சுமந்தன்று கோக்களின் மாளாமல் வருணனைத் தடுத்த நாமம்
மாரீசன் பின்னே திரிந்து மிருகூராக மானையே யெய்த நாமம்
நிலையாதசூரனை வராகவவ தாரமாய் நின்றன்று கொன்ற நாமம்
நீலமே கத்தை நிகர்காயாம்பூ வண்ணனெனு நெடிய வன்றிரு நாமமே         5

சாலோக சாமிப சாரூப மாகவே சாயுச் சியமான நாமம்
சகலகலை வேதப் புராணங்களுக் கெல்லாம் தயாபரம தான நாமம்
பூலோக புவலோக பாதாள மீதிலே புண்ணிய மளித்த நாமம்
புவனமது தன்னிலே நாலாற தென்னவே புராணகலையான நாமம்
ஆலோலமாகவே யண்டங்க ளாயிரத் தொட்டா யளந்த நாமம்
அங்குளோ ரிங்குளோ ராகவே யாவர்க்கு மறிவிக்க வந்த நாமம்
பரலோகமாகவே பன்னகசயனத்தில் பள்ளி கொண்டிட்ட நாமம்
பரவாச குருவீச திருநேச பிரகாச பகவனது திருநாமமே                     6

சுழியான முனையிலே சூக்ஷாதிசூக்ஷமாய் சொல்லியே நின்ற நாமம்
சொல்காவியங்களுக்கு பசாரமாகவே சொல்லிவிக்கவந்த நாமம்
வெளியான வெளியிலே மேலான வீட்டிலே மீதங்கிருந்த நாமம்
வித்தார மாகவேயுந்தார மோத வேவித்தாரமான நாமம்
ஒழியாததேக மதெடுத்தாலு முன் செயலுதவியாய் நின்ற நாமம்
உள்ளுற்ற சோதியாய் வெள்ளுற்ற காதலாயுள்ளத் தினின்ற நாமம்
அழியாத பதவியை மீந்தெனையென்னாளும்மடிமை கொண்டிட்ட நாமம்
ஹரிநமோ நாராயணா வென்றுரைப்பவர்க் கரிய பெரிய திருநாமமே          7

தானுந்தன் பாதமுஞ் சேத்துமம் வருங் காலைத்தற்காத்தே யருள்செய் நாமம்
சந்திரன் செல்வாழ்வு தொலையாத பாக்கியஞ் சார்ந்துரட்சிக்கு நாமம்
தேனந்தமாகவே திருநாம போதந் தரிசிக்கவந்த நாமம்
திருவவாதரமாய்த் தாசானுதாசணாச் செகதலம் பரவு நாமம்
ஆனந்த மாகவே ஓங்கார கம்பமாயுள்ளுருகி நின்ற நாமம்
உல்லாசமாகவே மூவகைத் தோத்திரமே யுயிராகி நின்ற நாமம்
ஆனந்தமாகவே யணுவுக்குமணுவாகியசை வாகி நின்ற நாமம்
ஹரிநமோ நாராயணா வென்றுரைப்பவர்க் கரிய பெரிய திருநாமமே          8

செய்யாத பாவங்கள் செய்தாலு நீக்கிடும் ஸ்ரீ்ராம வென்ற நாமம்
தீராத வல்பிணிகள் மாறாத துன்பங்கள் தீர்த்து ரட்சிக்கும் நாமம்
பொய்யான காமப் பெருங்கடல் வீழ்த்தாது புன்பிறவி தீர்க்கு நாமம்
புண்டரீகாட்சனைக் கண்டு சேவிக்கவேபுன் முறுவல் செய்யு நாமம்
மெய்யான கிருபைதருவைகுந்த வாழ்வினை வீறாயளிக்கு நாமம்
மெய்ஞ்ஞான வழிதந்தே யஞ்ஞானம் நீக்கியே மேன்மைதனை யீயு நாமம்
நையாமலே தினமும் நம்பினே னென்றவரை நாடி ரட்சிக்கு நாமம்
நாராயணா ஹரிகோவிந்தாவென்று நாடிவரு திருநாமமே                   9

ஸ்ரீங்கார மாகவே நூற்றெட்டு திருப்பதி சிறந்தோங்கி நின்ற நாமம்
தினந்தினமிராம வென்றுரைப்பவர்கள் சிந்தையுட் சிறப்புற்றிருக்கு நாமம்
நீங்காமலெந்நாளு மதிகதிர் விளக்கமாய் நிறப்பியே நின்ற நாமம்
நிஜநித்யமான தொருபரசத்திய வாசமாய் நிறைவுற்றிருந்த நாமம்
பாங்கான பேருடன் வாங்காமலே தினம் பண்பினைக் கொண்ட நாமம்
பச்சைமாலச்சுதானந்தகோ விந்தனெனப் பரவுதற்குரிய நாமம்
அங்காரமாகவே திருநாமமலையிலன் புவைத்திருந்த நாமம்
ஹரிநமோ நாராயணா வென்றுரைப்பவர்க்கரிய பெருதிருநாமமே           10