001c.jpg

DSC_0461_c.jpg

DSC_0553.jpg

துதி - விருத்தம் - பாமாலை - தோத்திரம்

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் துதி

சொற்பொருளும் உடலுயிருஞ் சுடரொளியும்
    விரைமலரும் சுவையும் பாலும்
நிற்குநிறை யெனக் கலந்து நிகரில்
    வீரிய பெருமாள் நிமலன் தன்னோ(டு)
அற்புதமாம் ஆடல்பல புரிந்தருளித்
    திருச்சி நகர் தென்னூர் மேவும்
பொற்றாமரைக் குளம் வாழ்
    பெரியநாச்சித் தாள் பணிந்து சிறக்க வாழ்வோம்

சீராரும் வணிகர்குலம் சிறக்க வரும்
    தெள்ளமுதே! தேவே இந்தப்
பாருலகம் போற்றுகின்ற பார்வதியே
அடியேங்கள் பாவந்தீர்த்தாளும் பார்வதியே
    பூரணியே! நாயகனாம் பொற்புடை
வீரிய பெருமாள் புகழுந்தேவி
    பேராரும் எமதன்னை
    பெரியநாச்சி தாயே! நின் மலர்த்தாள்
        போற்றி! போற்றி!!

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் தோத்திரப் பாமாலை

 1. வல்லவர் வாய்மையுள்ளோர் வளம் பெறு தென்னூர் வாழும்
  சொல்லொனாத் தேவர் போற்றும் சோதி சுந்தரியே வாலே
  நல்ல பெண்ணாச்சி மாலை நான் சொல்நாதர் மைந்தன்
  வல்லபை மணாளனான வரதனுங் காப்பு தானே.
   
 2. சீர்பெறு பெண்ணாச்சி யுந்தன் திருவடி பணிந்த பேர்க்கு
  பேர்பெறு கல்வி வெற்றி பெருமை நல்லறிவு ஊக்கம்
  ஏர்வலி புகழ் பொன் வாணாள் யிளமை நன்னுகர்ச்சி மக்கள்
  நேர்புவி மின் நோயின்மை நிறைசெல்வம் ஈரேட்யீயே.
   
 3. பேர்பெற்ற பெரியணாச்சி பெரியக்காளரிய நாச்சி
  சீர் பெற்ற பச்சநாச்சி சிறந்த பிச்சாயி அம்மன்
  தார் பெற்ற நல்ல தங்காள் தவநிறை நல்ல கண்ணு
  தேர் பெற்ற கன்னிமாரை தெரிசித்தேன் காத்தாள் வாயே
   
 4. தென்னவ ராயர் கோத்திரம் சீர் பெற அவதரித்த
  பெண்ணாச்சியம்மன் யுந்தன் பேர்பெறு மக்களுக்கு
  எண்ணிய செல்வம் தந்து இணையிலா மக்கள் தந்து
  மன்னவர் போற்ற நாளும் மைந்தரைக் காத்தாள் வாயே.
   
 5. தாயினு மினிய ளான தயாபரி பெண்ணாச்சி தாயே
  நாயினும் கடைய னான நல்லறி வில்லாப் பேயேன்
  வாயினா லுன்னை வாழ்த்தா வன் மன கொடியேனுக்கு
  சேயொடு செல்வந் தந்து சிறியனைக் காத்தாள்வாயே.
   
 6. மஞ்சு சூழ் தென்னூர் தன்னில் மாபெரும் கோவில் வாழும்
  கொஞ்சிய முப்பத்து மூன்று குலதெய்வம் கும்பிட்டேத்தும்
  அஞ்சு கோத்திரத் தாருக்கும் அன்புள அடியாருக்கும்
  நெஞ்சினில் நினைத்த தெல்லாம் நிமிஷத்தில் தருகுவாயே.
   
 7. மன்னவர் மற்றோர் போற்றும் தென்னவராய கோத்திரம்
  அன்னவர் குலம் விளங்க அருந்ததி தனக் கொப்பான
  பெண்ணாச்சி யம்மை யென்று பேர் பெற்ற தெய்வமாகி
  தென்னூரில் விளங்குந் தாயே சேயனை காத்தாள்வாயே.
   
 8. தந்தை தாய் தமயனில்லை தனிமையாய்த் தயங்குகின்றேன்
  பந்தமாம் வலையிற் சிக்கிப் படுந்துயர் பகறொணாது
  சந்தையின் கூட்டம் போன்ற ஜகத்தினர் தன்னை நம்பி
  சிந்தையும் நொந்திடாது சிறியனுக் கருள் செய்வாயே.
   
 9. பெற்ற தாய் பிதாவுக்கேனும் சிறுதொண்டு செய்தேனல்லேன்
  பற்றிலான் தாளை போற்ற பாக்கியம் செய்தேனல்லேன்
  உற்றவர் தமக்கு நாளும் உண்மையா யுளைத்தே னல்லேன்
  கற்றவர் பாதம் போற்றா நாயெனை காத்தாள்வாயே.
   
 10. என் மனக் கவலை நீக்கி யிணையிலா மக்கள் தந்து
  பொன்னோடு பொருளுந் தந்து புகழொடு வாழச் செய்து
  நன் மதியுள்ளோர் நேசம் நாளுமே வளரச் செய்து
  தென்னூரில் வாழுந் தாயே தீயெனக் காத்தாள்வாயே.
   
 11. இந்திர ஜாலம் போன்ற யிவ்வுலகத்தின் வாழ்வைச்
  சொந்தமா யெண்ணி யானுஞ் சொல்லொனாத் துயரத்தாழ்ந்தேன்
  மந்தமா மடையர் போலும் மலரடி மறந்தேனம்மா
  யெந்தனை மனம் பொருத்தே யெளியெனைக் காத்தாள்வாயே.
   
 12. உந்தனை மறந்து யானு முலகத்தில் வேறு தெய்வஞ்
  சிந்தையில் நினைத்து கொண்ட சீரிலா சிறியேனுக்கு
  மைந்தனில்லாது யானும் மனத்துயரடைந்தேனம்மா
  வந்தனஞ் செய்தேனம்மா யெந்தனுக் கருள் செய்வாயே.
   
 13. தண்ணீரில் விளக்கெரிந்த தன்மையை தரணியோர்கள்
  உண்மையா யெண்ணி நாளும் உன்திரு வடியைப் போற்றி
  தன்மைசேர் தனயனுக்கு தாழ்விலா ஆயுள் தந்து
  பெண்மணி வாழுந் தென்னூர் பெண்ணாச்சியே காத்தாள்வாயே.
   
 14. கும்பியின் கொடுமையாலே கோளுரை பலவும் பேசி
  அம்புவி யெல்லாஞ் சுற்றி அளவிலாப் பேரம் செய்து
  வெம்பியென் னுள்ளம் நொந்து வியாதியால் மேனி வாடி
  நம்பினேன் எனக்கு நல்ல லாபமும் தந்தாள்வாயே.
   
 15. துயராத கும்பியாலும் சொல்லொணா வியாதியாலும்
  தீராத மிடியினாலும் மனத்துயரடைந்தேனம்மா
  பாராது போலிராமல் பாவியேன் பிழை பொறுத்து
  தீராத மிடிநோய் போக்கி தீயெனைக் காத்தாள்வாயே.
   
 16. கைதனிற் பொருளுண்டாக கால்தனில் வலுவுண்டாக
  மெய்தனில் பெலுண்டாக மேனியின்றே சுண்டாக
  மைவிழி மனையாளுக்கு மைந்த னுண்டாக நல்ல
  செய் தொழிற் சிறப்புண்டாக சீக்கிரம் செய்வாய் தாயே.
   
 17. காலையி லெழுந்து நாளுங் கங்கையில் ஸ்நானம் செய
  மேலையோர் செய்த வண்ணம் மேன்மையாம் பூசையாற்ற
  மாலை நேரங்கடோறும் மாபெருங் கோவில் சுற்றி
  ஆலமுண்டோனைப் போற்ற அனுக்கிரக மருள்வாய் தாயே
   
 18. கஞ்சமா மலரில் வாழுங் கலைமகள் புருடனாலே
  பஞ்சமா பாவஞ் செய்யும் பஞ்சமன் வயிற்றி லென்னை
  கொஞ்சிய குழந்தையாக குடம் பையிற் படைதிடாது
  பஞ்சின் மெல்லடிய தாயே பாதுகாத்தருள் செய்வாயே.
   
 19. ஆதியிற் சைவனாடிக ஆகமந் தெரிந்தோனாக
  நீதியைத் தெரிந்தோ னான நிருபனய் நீ திலத்தில்
  கோதிலா வணிகஞ் செய்யுங் குணமுள வணிகனாக
  சாதியிற் படைக்கச் செய்வாய் தயாபரி காத்தாள்வாயே.
   
 20. குருடு கூன் செவிடு பேடு கோதுள பிறவி நீக்கி
  மருவிளாப் பிறவியாக மானிட ஜென்மந் தன்னில்
  அறிவுறு கல்வி மானாய் அவதரித்திடவே செய்வாய்
  திருவுறு தென்னூர் வாழும் திகம்பரி காத்தாள் வாயே.
   
 21. சிறந்ததோர் பாடல் பெற்ற திவ்வியச் சேத்திரத்தில்
  பிறந்திடச் செய்ய வேண்டும் பெரியணாயகி பெண்ணாச்சி
  மறந்திடக் கூடாதம்மா மைந்தனை மனதில் வைத்து
  வரந்தர வேண்டுமம்மா வந்தெனைக் காத்தாள்வாயே.
   
 22. பிறந்து பின்னிருந்து பின்னால் இறந்திடாச் சாய்ச்சியும் பெற்று
  பிறந்திடா திருக்கச் செய்வாய் பெரியணாயகி பெண்ணாச்சி
  தறந் தெரியாத யானும் சாற்றிய பாடலெல்லாம்
  நிறைமொழியாகக் கொண்டு நீடூழி வாழ்விப்பாயே.
   
 23. பிறந்து யான் வளரும் போது பெருஞ் செல்வம் கல்விஞானம்
  இறந்தவர்க் கிலையென்னாது யிகையாற் கொடுக்க வேண்டும்
  சிறந்தவர் வாழும் தென்னூர் தேவி பெண்ணாச்சியம்மே
  வரமது தந்து வரும் வாகுடன் வாழ்விப்பாயே.
   
 24. சத்திரம் தண்ணீர் பந்தல் சாதுசேர் மடந்தடாகம்
  பத்திசெய் கோவில் கூபம் பலருக்கு காரஞ் சோலை
  நித்திய அன்னதானம் நிறை தவ அடியார்க்கீய
  பத்தினித் தாய் பெண்ணாச்சி பாடுவோர்கருள் செய்வாயே.
   
 25. இருமண பெண்டீர் நேசம் இருந்திடா தெனக்கு நல்ல
  ஒரு மனதுடையளான ஒண்டொடி மனையாள் நேசம்
  பெருகிடச் செய்ய வேண்டும் பேர் பெற்ற பெண்ணாச்சியேயுன்
  திருவடி பணிகிலாத தீயெனக் காத்தாள்வாயே.
   
 26. ஞானமுங் கல்வி வேண்டும் நற்றிடம் அருள வேண்டும்
  தனமும் தவமும் வேண்டும் தற்பரனருளும் வேண்டும்
  வானவர் நாடு நாளும் வழி திறக்க வேண்டும்
  ஊன மில்லாக்கை தந்து உறுதியாய் காத்தாள்வாயே
   
 27. கொண்டதோர் கணவன் றுஞ்சகக் கொடுங்கலி காலந்தன்னில்
  மண்டு செந்தணலில் பாய்ந்து மாலையிட்டோனைப் போற்றி
  அண்டர்கள் புகழுந் தெய்வ மாகிய பெண்ணாச்சி அம்மை
  பண்டுழ கற்பன் னாற்போல் பாதுகாத்தருள் செய்வாயே.
   
 28. கண்களு மழுங்கிடாமல் காதுகள் செவிடாகாமல்
  வண்ணவாய் குழறிடாமல் வாக்கது பிசகிடாமல்
  திண்ணிய தோள்கள் இரண்டும் திறமது குன்றிடாமல
  பெண்மணி பெண்ணாச்சி தாயே பேரருள் செய்குவாயே.

 29. அண்ணலார் பாகம் பெற்ற அன்பினிற் பிரியாளம்மை
  கண்ணகி வந்தியம்மை காரைக்காலம்மையார் போல்
  பெண்மணியாக வந்த பெண்ணாச்சி அம்மையுங்கள்
  பொன்னடி போற்றிடாத புதல்வரை காத்தாள்வாயே.
   
 30. முக்கணன் முதல்வி போற்ற முன்னுள் தெய்வம் போற்ற
  அக்கினி சொரூபமாகும் அம்மையுன் தெய்வமான
  எக்குலத்தாரும் பார்க்க இணையிலா தெய்வமான
  வக்குவன் மரபில் வந்த வணிகரைக் காத்தாள்வாயே.

  அறியவன் அரனும் வாழி
  அம்பிகை மைந்தர் வாழி
  பருதி வெண்டி யடிகள் வாழி
  பாரதி திருவும் வாழி
  பெரியனாகியும் வாழி
  பேர் பெற்ற பெண்ணாச்சி வாழி
  விரி கடலுலகம் காக்கும் வேந்தனும் வாழி தானே!
   
பூஜைகள்

காலை 7 மணி
மதியம் 12 மணி
மாலை 7 மணி
கோவில் திறப்பு நேரம்
காலை 06.30 - மதியம் 12.15 வரை
மாலை 05.30 - இரவு 08.30 வரை

உத்திர நட்சத்திர பூஜை

10-05-14 - சித் 27 - சனி
06-06-14 - வை 23 - வெள்ளி
04-07-14 - ஆனி 20 - வெள்ளி (ஜனனம்)
31-07-14 - ஆடி 15 - வியாழன்
27-08-14 - ஆவணி 11 - புதன்
23-09-14 - புரட் 7 - செவ்
21-10-14 - ஐப் 4 - செவ்
17-11-14 - கார் 1 - திங்கள்
14-12-14 - கார் 28 - ஞாயிறு
11-01-15 - மார் 27 - ஞாயிறு
07-02-15 - தை 24 - சனி
06-03-15 - மாசி 22 - வெள்ளி
03-04-15 - பங் 20 - வெள்ளி

வருட பூஜைகள்

ஆடி 18 - 03-08-14 ஆடி 18 பூஜை (மதியம்)
மாசி 5 - 17-02-14 மஹா சிவராத்திரி (இரவு)

ஆனி உத்திரம் - 04-07-14
       பெரியநாச்சி ஜனன நட்சத்திரம்
ஆனி 26 - 10-07-14 - கும்பாபிஷேக நட்சத்திரம் (கேட்டை)
புரட் 5 - 21-09-14 நாகர் பூஜை(ஆயில்யம்)